×

தேஜ கூட்டணியில் தொடர்வது குறித்து பாஜவின் அறிவிப்பிற்கு பிறகே எங்கள் நிலையை தெரிவிப்போம்: ஓபிஎஸ் தகவல்

அவனியாபுரம்: நாடாளுமன்ற தேர்தலில் தேஜ கூட்டணியில் தொடர்வது குறித்து, பாஜ அறிவித்த பிறகே எங்கள் நிலையை தெரிவிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா அரசு தொடர்ந்து பாரபட்சமாக செயல்படுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக உள்ளது. மேலும், அவர்களின் நடவடிக்கை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுக்கின்ற செயலாகும்’’ என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் பாஜ – அதிமுக கூட்டணி முறிவு குறித்து கேட்டபோது, ‘‘நாம் நல்லவர்களைப் பற்றி பேசுவோம். அவர்களது கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் குறித்தும், பாஜ – ஓபிஎஸ் கூட்டணி குறித்தும் நாளை (இன்று) மாலை பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பேன்’’ என்றார். ‘என்டிஏ கூட்டணியில் நீங்கள் தொடர்கிறீர்களா’ என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார். அவருடன் இருந்த முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களின் கேள்வி குறித்து ஓபிஎஸ்சிடம் செல்போனில் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அவர், ‘‘என்டிஏ கூட்டணி என்பது எனது காதில் இந்தியா கூட்டணி என்று விழுந்ததால் பதிலளிக்கவில்லை. தேஜ கூட்டணி குறித்து பாஜ முறைப்படி அறிவித்த பிறகு, எங்கள் நிலையை தெரிவிக்கிறோம்’’ என்றார்.

The post தேஜ கூட்டணியில் தொடர்வது குறித்து பாஜவின் அறிவிப்பிற்கு பிறகே எங்கள் நிலையை தெரிவிப்போம்: ஓபிஎஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Teja alliance ,Avaniyapuram ,O. Panneerselvam ,
× RELATED மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக...